கூண்டுக் கிளி

ஏன் இந்த
உக்கிரகப் பார்வை
கிளியாரே ?
மனிதர்களே !
உங்களுக்கு
எதிர்காலம்
எனக்கு
சிறை வாசம்
ஏன் ?
என்று கேட்டது
ஜோசியக் கிளி
பறந்து பாரேன்
என்றேன் நான்
மறந்து விட்டது
என்று கூண்டுக்குள்
சென்றது கிளி
உரிமைக்கு
குரல் கொடுத்து
உள்ளிருப்பு போராட்டம்
கூண்டுகளில் பந்தலில்
வானமும் இல்லை
தரையும் இல்லை
இவர்களுக்கு
அடிமைச் சிறையே
இவர்களுக்கு
சொந்தம்
~~~கல்பனா பாரதி~~~