புதியதோர் செயல் செய்குவோம்
செயல் கருவி கொண்டு சிலை செதுக்கிடுவோம்
---சிந்தனையும் வடித்திடுவோம்
கயல் விழி மாதரின் கற்பினை
---கடைமையெனக் காத்திடுவோம்
கயமை புரிவோரை ஒறுக்க
---புதிய நீதி செய்திடுவோம்
வயல்வெளிகளின் பசுமையும்
----வளமையும் காத்திடுவோம்
வளரும் தீமை கட்டிடங்களை
----தகர்த்து எறிந்திடுவோம்
அயல் நாட்டினருக்கு நிகரான
----ஆற்றலை வளர்த்திடுவோம்
அந்நியரிடம் கையேந்தி நிற்கும்
----மடமையை ஒழித்திடுவோம்
-----கவின் சாரலன்