நட்பு

எத்தனையோ கவிதைகள் எழுதிவிட்டேன்
நட்பே உன்னை பற்றி எழுத முற்பட்டேன்
வார்த்தைகள் காணாமல் முழித்திட்டேன்
என்ன என்ன இன்பங்கள் கண்டுவிட்டேன்
உரிமையோடும் பல சண்டைகள்
போட்டுவிட்டேன் ,
சோகம் கண்டு நான் நின்றபோது
உன் பாசம் கொண்டு அணைதிட்டாய்
மெல்லெனவே குறும்புகள் செய்திட்டாய்
பின்னமே பஞ்சமின்றி சிரித்திட்டாய்
எவர் நமக்குள் வஞ்சனை செய்தாலும்
தஞ்சம் தந்த தாயன்றோ - நீ
என் அருமை சேயன்றோ - உன்
பிரிவை கண்டு நான்
தளர்ந்து நின்ற போது - உன்
மௌனமொழிகளை நம்
நட்பில் கலந்திட்டாய் !
நம் நட்பும் ஒரு நாள்
காவியமாகும் - சிந்தை
தவறி கூறிவிட்டேன் ,
நம் நட்பே காவியம்தான்
காவியங்கள் சாதனை படைக்கட்டும் !
சிந்தை கலங்கி நில்லாதே

எழுதியவர் : சாதனை சிறகுகள் ப்ரின்சி (16-Mar-13, 3:45 pm)
சேர்த்தது : rsmv244
Tanglish : natpu
பார்வை : 84

மேலே