உலகம் சுற்றும் வாலிபன்

போட்டி போடுகிறான்
நீயா ? நானா ? என்று...!

வாரி இறைக்கிறான்
தண்ணீரைப் போல ...!

கொடுக்கவும் வாங்கவும்
பகடைக் காயாய் நீதான் ...!

வரிசை வரிசையாய் நிற்கிறார்கள்
உன்னை மரியாதையோடும் பக்தியோடும் ...!

ஊரெல்லாம் கொண்டாடுகிறது
உன்னை வாழ்த்தியபடியே..!

ஏலம் விடுகிறது
உன்னை ஏற்றியும் இறக்கியும் ...!

உலக உயிர்கள் வாழும்
நீ இருந்தால் மட்டுமே ...!

உன்னை மதிப்பதில்லை
போலியாய் சிரித்தால்...!

நீ மட்டும் தான்
உலகையே சுற்றி வருகின்றாய்
ஆடையின்றியே ...!

(யாரென்று தெரிகிறதா ?ம்ம் ம்ம் எனக்கு மட்டும் தான தெரியும் )

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (16-Mar-13, 4:49 pm)
பார்வை : 207

மேலே