ஈழபடுகொலைக்கு எதிர்ப்பு வைத்து >>>>>>>>

நெல்லையில் நேற்று நள்ளிரவில்
-------தொடர்ந்த பலத்த மழை
வர்ணிக்க வார்த்தை இல்லை
-------வானமும் இறங்கியது
தமிழுக்காக தலை வணங்கி
-------தருமத்திற்கு கோஷமிட்டு
போராட்டத்தில் பங்களித்து-ஆம்
-------ஈழபடுகொலைக்கு எதிர்ப்பு வைத்து !!!!!!!!

தமிழர்களின் சாசுவதமான
-------கொந்தளிப்பு விரைவில்
ஐ.நாவரை ஒலிக்கும்
--------தமிழர்களின் கதறல்
கடலில் மையமிட்ட புயல்
-------விரைவில் கரைகடக்கும்
சிங்கத்தின் கோட்டைக்குள்
--------மான்கள்கூட நுழையலாம்
குள்ளநரிகள் நுழைவதா ?

மூவாயிர ஆண்டுகால
-------நாகரிக முதிர்ச்சியை
தமிழர்களின் மூளை
-------சுமந்து திரிகிறது
இடைசொருகல் நீ
-------என் இனத்தை அழிப்பதா!!!!!
அலைகளுக்கு மத்தியில்
------அதர்மம் செய்தாய்
அலைகள் சேனல் நான்கு
------வழி ஆப்பை சொருகிவிட்டதா?

விரைவில் தீர்ப்பு வரும்
------ அதற்கு முன் குழி தோண்டி
படுத்துகொள் பகைமையே !!!!!!!!!

விரைவில் தீர்ப்பு வரும்
------அதற்கு முன்தோரணம் கட்டி
ஆனந்தகூத்தாடு தமிழன்னையே!!!!!!!!!

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (16-Mar-13, 4:45 pm)
பார்வை : 122

மேலே