இளவல்கள் புரட்சி

எக்கரம் தோற்பினும்,
இக்கரம் தோற்கா,

இக்கணம் தோன்றிய,
இளவல்கள் புரட்சி,
நம் இனம் கொள்ளும்
நிம்மதி மூச்சு..

மாணவ புரட்சி
மாண்புகள் கொள்ள
மடிந்தவர் தியாகம்
மடியாமல் வெல்ல

உரிமைகள் கோரி,
தமிழ் உணர்வினை ஏந்தி,
ஏதிலி வாழ்வினை உடைத்தெறிய,
எண்திக்கும் ஒலிக்கும்
என் இளவல்கள்
புரட்சி ஓங்குக...

எழுதியவர் : அருண் (16-Mar-13, 4:26 pm)
பார்வை : 135

மேலே