பலம்...பாலம்...பாரம்..பலவீனம்....(அகன் )

அன்னையின் கருவறை
ஓர் இருட்டு வகுப்பறை...
-இருளிலிருந்து ஒளிக்கான
ஒரு பயணம்...

திண்ணைகளின் விளிம்புகளில்தான்
எத்தனை திருப்புமுனைகள் ...
-மணற் பரப்பில் விரல்களின் நிமிர்தலுக்கான
ஒரு தேடல்

பண்டமாற்றங்களில் கற்பித்தல்
மாறியவை அறிவு மட்டுமல்ல
-ஒழுக்கமும் அன்பும் கலந்த வாழ்வுக்கான
ஒரு தர்மம்

இப்போதெல்லாம் ...,
விரல் எண்ணிட கணணிகள்...
வீதி விலாசமறிய விரி திரைகள்..
அக்குள் சொரிய அறிவியல் கருவிகள்...
அர்த்தம் இழந்துப் போகின்றன
இருட்டிலும் ,திண்ணையிலும்
பண்டமாற்றங்களில் பெற்றவை எவையும்...
வெளிச்சங்களிலிருந்து இருட்டுக்கான
ஒரு யாத்திரையில் பல கால்கள்..

அன்றியும் அன்றைய
உன் பலம்
எனக்கு பாலமாய் இருந்ததே...
இன்றைய என் கற்றல் பாரம்
என்னை பலவீனமாக்குகிறதே...

யாத்திரை நிறைவடையும் முன்
அம்மா எனக்கொரு கருவறை கிடைக்குமா...?


(தோழமை நெஞ்சங்கள் இனி என் படைப்பு குறித்த கருத்துக்கள மட்டும் பதியவும்..புள்ளிகள் எதுவும் அளிக்க வேண்டாம்..என் படைப்பு எதுவும் இனி பரிசுக்கான போட்டியில் பங்கு பெறாது..என அறிக...நன்றி .)

எழுதியவர் : அகன் (16-Mar-13, 5:58 pm)
பார்வை : 136

மேலே