முற்றிக்கிடக்கும் முரண்கள்

சிறையின் கதவும்
சிசுவின் கருவும்!
கரிக்காத உப்பும்
சரியான துப்பும்!
கள்ளியின் தண்டும்
பசுவின் கன்றும்!

சூளுரை மொழியும்
சோம்பேரிப் படையும்!

வேம்பின் விதையும்
தேனின் சுவையும்!
பாம்பின் நஞ்சும்
பனையின் பிஞ்சும்!

பாவத்தின் தவறும்
பாவியின் சரியும்!
நீதிபதி மகனும்
நியாயத்தின் நிழலும்!
அறையில் களவும்
தெருவில் காவலும்!

இலையில் உணவும்
எதிரியின் பரிமாறலும்!
பித்தன் ஆடையும்
தென்றல் வாடையும்!
நிலவின் தெளிவும்
கரையின் அலையும்!

செறுப்பின் சின்னமும்
கட்சியின்மரியாதையும்!
இலவசப்
பொருளும்
இடதுகையில் பணமும்!

எறும்பின் எழுத்தும்
யானையின் பிழை
திருத்தமும்!

ஞானியின் பதிலும்
ஞாலத்தின் கேள்வியும்

யாவையும் யாதோர்
இடத்தில்
முரணில் முட்டியே
தீதோராய் திரிவது
மானிட னியல்பே!

எழுதியவர் : ருத்ரா (16-Mar-13, 6:56 pm)
பார்வை : 137

மேலே