கோவத்தோட மயக்கம்

மல்லிகை
தோட்டத்தில்
அதிகாலை நேரத்தில்
ஐந்து ரூபா சம்பளத்தில்
அரைகுறை பார்வையில்
வறுமையின் நடுக்கத்தில்
கை நடுங்க
கால் நடுங்க
ஒரு ஒரு பூவா பொருச்சு
ஒரு ரூபா அரசி வாங்க
ஓட முடியாம
ஓரமா ஓடி போனாலே
மல்லிகை செண்டு தான்
வேணும்னு
வண்டி ஒட்டும்
புருஷன் கிட்ட
சண்ட தான் போட்டாளே
கோவப்பட்டு
வேகமா தான் போனனே
கண்ணும் மண்ணும்
தெரியாம
ஓரமா போனவ மேல தான்
விட்டானே
அரிசி வாங்க போனவ
மயக்கம் போட்டு விழுந்தாலே
கேக்க தான் யாரும் இல்லாம .....!!!!

எழுதியவர் : SriRaam (16-Mar-13, 6:49 pm)
சேர்த்தது : SriRaam
பார்வை : 91

மேலே