ஏன்தான் இந்தப் பரதேசி படம் பார்த்தேனோ...?

(இது பாலாவின் பரதேசி படம் பார்த்துவிட்டு மனநிலை பாதித்த இன்று வாழும் ஒரு பரதேசியின் வாக்குமூலம்)

வாழ்க்கையில்
தொலைந்துபோனவைகளை
மீண்டும் நினைக்கவைத்து....
நித்திரை கெட்டது
நிம்மதி விம்மியது

பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...?

பாலா! உமக்கே இது நியாயமா...?
நீயும் ஒரு பரதேசிதான் என்று என்னை
சொல்லாமல் சொல்லிவிட்டாயே...?

எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்து
எங்கேயோ ஒரு கிராமத்தில் வளர்ந்து
எங்கேயோ ஒரு நகரில் படித்து...
முப்பது வருடங்களுக்கு முன்பு
அரசு வேலைதேடி சென்னை வந்து ..
அன்று அதுவும் குதிரைக் கொம்பு
அதனாலே அகப்பட்டுக் கொண்டேன்
முதலாளிக்கு நல்லதொரு தொழிலாளியாக

அன்றிலிருந்து இன்றுவரை
வயிறு நிரம்புகிறது வாழ்க்கை ஓடுகிறது....

ஆனாலும்....

பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...?
ஏதோ ஓன்று தொலைந்தது
அதுவும் என்னவென்று தெரிந்தது...?

அழிந்துபோனது சுயமரியாதை
தொலைந்து போனது தன்மானம்
குலைந்து போனது என் சுதந்திரம்
கலைந்து போனது என் உரிமைகள்

பாலாவின் பரதேசி படம்
ஏன்தான் பார்த்தேனோ...?
என்னுள் தூங்கிக்கிடந்த
தன்நம்பிக்கைய
தட்டி எழுப்பிவிட்டது...
விழிப்புணர்வை விதைத்துவிட்டது

...............................பரிதி.முத்துராசன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (17-Mar-13, 1:48 pm)
பார்வை : 156

மேலே