.............பாலகன்...........

மூன்றாவதுபட்சமாயிருக்கட்டும் இனமும் குணமும்,
இரண்டாவதுபட்சமாயிருக்கட்டும் உரிமையும் உறவுமுறையும்,
முதற்பட்சமாய் ஆகட்டும் கொடுமைகளும் கொடூரங்களும்,
நாங்கள் குழந்தைகளை,
"கடவுளின் வடிவங்களாகவும்"
"வரம்தரும் தேவதைகளாகவும்"
"ஒளிதரும் தேவதூதர்களாகவும்"
"நிம்மதியின் நிறைகுடங்களாகவும்" பாவிப்பவர்கள்,
எப்படி கொல்ல மனம்வந்தது பிஞ்சுக்குழந்தையை ?
பால்வடியும் முகம்பார்த்துமா இறங்கவில்லை ஈனமனம் ?
தள்ளிவிடவும் யோசிக்கவைப்பவனின் துள்ளலை எப்படி நிறுத்தினீர் ?
மிருகங்கலென்று உங்களைச்சொல்லி அவைகளைக் கேவலப்படுத்த இயலாது !
சொல்லவொணாத துஷ்டதுரோகிகள் நீவீர் !
பதைபதைக்கும் உயிர் சிறகுலர்த்த பல யுகங்கள் பிடிக்கும் !
ஏனெனில் இது மனிதம் புதைத்த மாபெரும் கொடுஞ்செயல் !
சித்தம் கலங்கி ரத்தம் உறைகிறது !
கரங்களிருந்தும் உரங்கள் உதவாமல் நாங்கள் !
வன்முறை இருமுனைக்கத்தி எனத்தெரிந்து அமைதியாய் துடிப்பு !
எமது தேசமோ !
வேசம்கட்டி வேடிக்கை பார்க்கிறது அவலத்தை !
கேட்க ஆளில்லாதுபோய் முடிந்துவிடாது எதுவும் !
நீதி வெளிப்பட்டே தீரும் !
துரோகம் அடிபட்டே சாகும் !
உறக்கம்பறித்த இரக்கமில்லாதவர்களுக்கு,
இன்னும் ஏன் தயவுகாட்டுகிறாய் பாரதமாதா ?????
ஒன்றுபடுத்தி உமையுனர்த்தி,
கொன்றுகுவித்து பறைசாற்று உன் தன்மையை உலகுக்கு !
தொழுது நிற்கின்றனர் அழுது அழுந்தும் உன் பாலகர்கள் !
நீ கட்டளையிட்டால் வெம்பி வெடிக்கக்காக்கும் வாமனர்கள் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (17-Mar-13, 8:41 pm)
பார்வை : 107

மேலே