எழும் பிறப்பெல்லாம் இனிதே!
நெஞ்ச மினித்து இன்பம் பெருக
மனமே நீ என்ன செய்வாய்?
மை விழி மாதை நினைப்பாயோ? - அன்றி
மாது தந்த இதழமுதை நினைப்பாயா?
செப்பாய் மனமே! நீ செப்பாயோ!
ஐ புலன்மூட வருமின்பம் இன்பமோ! - அன்றி
ஐ புலன்திறக்க வருமின்பம் யின்பமோ
மனமே நீயிங்கு வாய்மையை வளர்ப்பாயோ!
பூவழகு, ஓடும் நீரழுகு, மயிலிறகு
மஞ்ச வெயிலழுகு, வஞ்சி நடையலழுகு
வான் மழைபொழிய வருமின்பம்- இன்பமா!
மனமே மறைக்காமல் விளக்கம் தருவாயா!…
அமிழ்தமென்ற சொல் தமிழில் உண்டு
அதை அருந்தியவர் யாருண்டு சொல்லு!
வந்ததும் வெந்ததும் இன்பமல்ல
எதை பருக வருமிந்த யின்பம்?
செந் தமிழ்தேன் பருக பருக
நெஞ்சம் இனிக்கும், பிறப்பினிக்கும்!
தஞ்ச மடைவாய் தமிழ் தேனிடத்தில்
இப்பிறவி யன்றி எழும் பிறப்பெல்லாம் இனிதே!.
நன்றி
வாழ்க வளமுடன்
ராசி