உன்மேல் உண்மை.....!!

உன்னை அறிந்தால் - மனிதா நீ
உன்னை அறிந்தால்..........
உண்மைக்கு குரல் எழுப்பலாம்.....!!!
உண்மை புரிந்தால்
உலகம் தெளிந்தால்
இருளை ஒழிக்கலாம்........!!

அடிமை இருளை ஓழித்திட....!!
வீரத்தை நோக்கி ஓடிடு - மனமே.
தீண்டாமை இருளை ஓழித்திட.......!!
சமரச சாரலை ஏற்றிடு - மனமே.
வறுமை இருளை ஓழித்திட....!!
வளமிகு சமுதாய வித்திடு - மனமே.
கல்லாமை இருளை ஓழித்திட...!!
விழிப்புணர்வு சுடரை ஏற்றிடு - மனமே.

உள்ளவர்க்கும் உளல்பவர்க்கும் உண்டென்று
உண்மை உயிர்வுகளை உளர்த்திடு!!
நாடாயினும் காடாயினும் செழித்திடவே
சிறந்த நெறிகளை செதுக்கிடு!!

இவை இனியதானால்
இனிமையாகும் பாரதம்!! - இது
உன்மேல் உண்மை.....!!
உன்மேல் உண்மை.....!!
உன்மேல் உண்மை.....!!

எழுதியவர் : ஜெய சூர்யா (21-Mar-13, 12:23 am)
சேர்த்தது : ஜெய சூர்யா
பார்வை : 146

மேலே