விபச்சாரம்
சிரிப்புக்கே சிலர்
சில்லரை போட்டனர்
தேகம் என்றதும்
ரூம் கேட்டனர்
மூலதனம் இல்லாத
தொழில்
வீட்டுக்குள்ளே வியாபாரம்
என்று பேச்சு .....
என் கட்டிலுக்குத்தான்
தெரியும்
என் வலி -என்
கைக்குட்டையை கேட்டால்
சொல்லும் கண்ணீரின் கதை
தேடிவருவோர் கோடி
ஆண்கள் -என்
தேகம் தின்ன
நான் வாடிபோனாலும்
விடுவதில்லை
அவர்கள் வேட்டையை ....
என்
கல்வியை
கானல் நீராக்கி
கற்பை ஏலம் விட்டேன்
பலர் கண்ணீரை
துடைக்கவே
என் ஆடை உரிவது
என் குடும்பம்
ஆடை உடுத்தவே
என்னை
விபச்சாரி என்று
பல்லுக்காட்டும்
பரதேசிகளுக்கு தெரியுமா ?
கரைந்த என் கற்பால்
ஊரிலே சிரிக்குது -என்
குடும்பம் என்று