மழையே! மழையே!
மழைக்குப்பின் சோலையின்
மலர்கள் மலர்ந்தது
வாசம் நிறைந்தது...
மழைக்குப்பின் சாலையின்
மேலேயும் பள்ளத்திலும்
தண்ணீர் நிறைந்தது...
மழைக்குப்பின் சோலையின்
வண்ணமும் எழிலும் கண்டு
உள்ளம் நனைந்தது...
மழைக்குப்பின் சாலையின்
மேல் போவோர் வருவோரின்
உடைகள் நனைந்தது...
மழைக்குப்பின் சோலையில்
மலர்ந்த மலர்களையும்
மாறிய தோட்டத்தையும்
கண்டு மனம் சிரித்தது...
மழைக்குப்பின் சாலையில்
செல்வோரின் உடைகளையும்
மாறிய தோற்றத்தையும்
கண்டு ஜனம் சிரித்தது...
மழைக்குப்பின் சோலையில்
வாசமலர்கள் தன்னை
மாலையாக்க பறித்து சென்று
விடுவார்களே என வருந்தின...
மழைக்குப்பின் சாலையில்
ஆடிய சிறுமலர்கள்
அழுக்காகிய உடையால் வீட்டில்
அடிப்பார்களே என வருந்தின...
மழைக்குப்பின் சோலையானது
சொர்க்கலோகமாக காட்சியளித்து
அனைவரையும் மகிழ்வித்தது...
மழைக்குப்பின் சாலையானது
நரகலோகமாக காட்சியளித்து
அனைவரையும் துன்புறுத்தியது...
மழையினால்
சோலைக்கு
பெருமை...
மழையினால்
சாலைக்கு
சிறுமை...
மழையினால் மலருக்கு
உயிர் வந்தது
அது சோலையில்.,
மழையினால் பலருக்கு
உயிர் போனது
அது சாலையில்...