பாட்டி

பாட்டியின் இடுப்பில் பயணித்து
பள்ளிக்கு சென்றநாளில்
கணித ஆசிரியர் இட்ட அடி
என் தொடையில் விழுந்ததோ ?

இல்லையில்லை

என் பாட்டியின்
ஈரக்குலையில் விழுந்ததோ ?

வலியின் சுவடு
மறுநாளே மறைந்துவிட்டது

என் பாட்டியின்
கண்ணீரின் சூடு
இன்றுவரை என் நெஞ்சில் கதகதப்பாய்

எழுதியவர் : (21-Mar-13, 5:00 pm)
சேர்த்தது : rawoof
Tanglish : paatti
பார்வை : 109

மேலே