மழையே நன்றி !
சாலையின் நடுவே
திடீரென்று மழை
குடையை விரித்தேன்
ஓட்டைக் குடை
உள்ளேயும் சாரல்
நனைந்து நடந்தேன்
சாலையின் ஓரத்தில்
அவளும் இணைந்து
கொண்டாள்
குடைக்கு விடை
கொடுத்தேன்
தோள் சாய்ந்து
அவள் நடந்து வந்தாள்
மழையின் கொடைக்கு
நன்றி சொன்னேன்
~~~கல்பனா பாரதி~~~