ஆசை

சிறு பறவையாய் சுற்றித்திரிய
ஆசை...
கறை தொட்டு முறை தள்ளும்
அலை கடலோடு ஒடி பிடித்து
விளையாட ஆசை...
என்னோடு கவிதை பேசி
கண்ணடிக்கும் விண்மீன்களோடு
கவிதை பேச ஆசை...
என்னோடு சிறு பிள்ளையாய்
சுற்றி திரியும் நிலவோடு
சுற்றி திரிய ஆசை...
என்னை தொட்டு தழுவும்
தென்றலோடு, தழுவிக்கொள்ள
ஆசை...
பஞ்சாய் மிதக்கும்
மேக கூட்டத்தோடு மிதக்க
ஆசை...
தென்றலோடு ரகசியம் பேசும்
இரவோடு ரகசியம் பேச
ஆசை...
புல் நுனியின் மேல்
முத்தமிடும் பனி துளிக்கு
முத்தமிட ஆசை...
முட்டு அவிழும் மலரின்
ஓசை கேட்க
ஆசை....
இமையம் தொட்டு
மேகம் பிடிக்க
ஆசை...

எழுதியவர் : இலா (21-Mar-13, 6:54 pm)
சேர்த்தது : செல்வி இலா
Tanglish : aasai
பார்வை : 153

மேலே