நட்சத்திர கவிதைகள் - III
நட்சத்திரக் கவிதைகள் III
கலாமுற்றம் பட்டியலிடும் படைப்புக்களில் உங்கள் கருத்துக்கள் காண்பதால் சந்தோசத்தில் இருக்கிறேன் ! மூன்றாம் பாகம் தரும் படைப்புக்கள் பாரும்!
--------------------------==---
எழில் தொலைத்த நான்.... - சரவணா
பீடு நடை போடும் ஒரு புது கவிதை. மிகக் கம்மியான விளக்கங்களுடன் ஒரு பெரிய கதையினை, விஷயத்தினை சொல்லி இருக்கிறார் படைத்தவர் ! ரசித்துக் கொண்டே வாசிக்கும் ரகமல்ல இது வாசித்துவிட்டு, யோசித்துவிட்டு ரசிக்க வைக்கும் ரகம் இது ! அற்புதமான படைப்பு!
Added by: சரவணா - கவிதை எண் - 113443
>>>>>>>>>>>>>>>>>>>>>>
தேடுகிறேன்..! - கொ.பெ.பிச்சையா..
மிக அருமையாக வடித்திருக்கிறார் கவிஞர்.கொ.பெ.பிச்சையா..
நிபுணத்துவமுள்ள எண்ணவோட்டங்கள் சரமாரியாய் வந்து இருக்கிறது படைப்பில் ! வயதுக்கேற்ற அனுபவ முதிர்ச்சியினைக் காட்டும் படைப்பு! மிக அருமை !
Added by: kppayya - கவிதை எண் - 113458
>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஊமைக்குயில் - ஹபீலா ஜலீல்
நல்ல உணர்வுகளை எழுதி இருக்கிறார் இந்த படைப்பில். ஒரு கவிதைக்கான அம்சங்கள் பொதிந்திருந்தாலும் ஏதோ ஒரு குறை தெரிகிறது. இருந்தாலும் இது சிறந்த கவிதை தான் ! வாசிக்கும் நீங்கள் தான் குறை இருக்கிறதா இல்லை குறை என்று சொன்னது என் குறையா என்று சொல்ல வேண்டும்.நல்ல படைப்பு.
Added by: hafeela - கவிதை எண் - 113469
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கவிதை துணுக்குகள் - மணிகண்டன் சுகன்.
அருமையான விடயங்கள் தெளிக்கப் பட்டிருந்தாலும் தெளிவில்லாமல் சிதறப் பட்டு இருக்கிறது. புலமையுடையோர் யாரேனும் படைத்தவனின் அனுமதியோடு அல்லது உரிமையோடு சீராக்கம் செய்தால் இன்னும் அழகாகும்...இருந்தாலும் இது நட்சத்திரக் கவிதையில் இருக்க தகுதி உள்ள படைப்பு !
Added by: manikandan sugan - கவிதை எண் - 113438
-----------------------------------------------------------------------
பெண் பிள்ளைகளின் படைப்புக்களை தனியாக “தாமரை மொட்டுக்கள்” என்று பதிவிட முன்வந்தேன்...ஆனால் சில ஆர்வலர்கள் தனியாக மகளிருக்கு ஒரு படைப்பு தேவையில்லை என்று சொல்கிறார்கள்....உங்கள் கருத்து என்ன ? தோழர் சங்கரனின் ஆலோசனையின் படி தாமரை மொட்டுக்கள் , “தாமரை தடாகம்” அல்லது “தாமரை பொழில்” என்று பெயர் மாறி வரும். இப்படி ஒரு படைப்பின் தேவை உண்டா இல்லையா என்பதை சொல்லுங்கள் உடனே !
------------------
நலன்புரி செயற்பாடுகளில் அடுத்த கட்டமாக வருவன....
“நிலாமுற்றம்”
இது சிறந்த சிறுகதைகளின் பட்டியல் தரும்.
“ஒரு சிப்பி ஐந்து முத்து”
இது ஒரு படைப்பாளியின் சிறந்த ஐந்து படைப்புக்களை வாரம் ஒரு முறை வழங்கும்.
(கட்டுரை, நகைச்சுவை கவனிக்கப்படும் விரைவில்)
மேலும் பல திட்டங்களுடன் விரியும் இச்சேவை !