உள்ளத்தில் சுமக்கிறேன் உன்னை
உள்ளத்தில் சுமைக்கிறேன் உன்னை...
உதைத்து விடாதே என்னை..!
பள்ளத்தில் விழுந்துகிடக்கிறேன் நான்...
பார்வையில் என்னை தூக்கிவிடுவாயா நீ..!
துள்ளும் அளவுக்கு உன்னை தூக்கி வைப்பேன்...
உன்னை துன்பமில்லாமல் தாங்கிக்கொள்வேன்..!
வெள்ளம் போல என்னை அடித்துச் செல்லடி...
உன்னை வெற்றி வழியில் நான் வாழவைப்பேனடி..!