கை கோர்ப்பாயா காதலியே ?
நேற்று தான் என்னுள் முளைத்தாய்
இன்றே விருட்சமாய்
வியாபித்து விட்டாய்
மாயம் என்ன செய்தாய்
மாதவ குல மங்கையே?
மயங்கினாலும் நானே
மகிழ்வுடன் வாழ்கிறேன் நானே
மாது உன் நினைவுடனே
சொப்பனத்திலும் சுழலாய்
சுந்தரி நீ சுழல்கிறாய்
சாலை முழுக்க நீயே
சஞ்சாரம் செய்கிறாய்
எப்போ நீ வருவாய் ஏந்திழையே
என்னோடு கை கோர்த்து ?.
பசுமை நிலவன்.