நண்பர்களை கொண்டாடுவோம்
என் பார்வையில்
கறைகள் அழகு
மழை நேர
மாலை பொழுது
நண்பர்களோடு கால்பந்து
விளையாடி வெள்ளை
சீருடை முழுவதுமாய்
கறைகளும் கசக்களுமாய்
இருந்தபொழுதும் மனதும்
உடலும் புத்துணர்வாய்
மிகமிக அழகாய்!
காயம் அழகு
விளையாடும் தருணங்களில்
தவறுதலாய் சின்னசின்ன
காயங்கள் ஏற்பட
ஓடோடி வந்த
நண்பன் தன்
எச்சிலை காயத்தில்
தடவி எரிச்சலை
அடைக்கிய படி
கொஞ்சம் பொருடா
இப்போ நல்லா
ஆயிடும் பாரேன்
என்கிற குளுகுளு
குளுக்கோஸ் வார்த்தைகள்
பொழிய பட்ட
காயம் அழகாகிப்போகும்!
அழகான காபி
உடல் நிலை
சரியில்லாமல் போக
சரிவர படிக்காமல்
தேர்வெழுத செல்ல
குட்டிகுட்டியாய் எழுதும்
நண்பன் எனக்காய்
கொட்டைகொட்டை எழுத்துக்களால்
எழுதி விடைத்தாளை
என் கண்களில்
படும்படி ஆசிரியருக்கு
பயந்த வண்ணம்
காண்பித்த பொழுது
அந்த காபியும்
அழகோ அழகுதான்!
நண்பர்களை கொண்டாடுவோம்