அழகிய அதிகாலை

ஆழி முத்தெடுக்க
ஆழ்ந்து சென்ற ஆதவன்
புல் மேல் புதையல் கண்டு
புறப்பட்டு வருகிறானா ?

உறங்கிடும் மொட்டுகளே
எழுந்திடுங்கள் !!!!
உங்கள் ஆடை களைந்து
அங்கம் காண
ஆதவன் வருகிறானாம் ..

கற்றை இருளில்
கண் விழித்த அல்லியே !!!
உன் காவலன் போயாச்சி
காத்திருப்பதன் பயனென்ன ???/
.
கூடு கட்டத் தெரியாமல்
வீடுதாவும் குயிலினமே !!!!
ஆதவன் வருகை சொல்லி
கூட்டத்தோடு பாடுங்கள் ..

வாடகையே இல்லாமல்
வாடி வீடொன்று நான் தருவேன் .

பனித்துளியில் குளித்திட்ட
சிறு நாணலே !!!!!!
உன் தலை துவட்டிவிட
சூரியன் வந்துவிட்டான் .

ஆதவன் வருகை கண்டு
ஆராவாரம் ஆர்பரிக்க
வெயிலவன் வரவு கண்டு
வெகுமதிகள் படையெடுக்க ..

உச்சி வெயிலில்
உள்ளங்கால் கால் சுட
மெத்தை விரிப்புக்குள்
மெய் மறந்து உறங்கும் மனிதா !
விழித்திடு !!!!
ஆதவன் கண்டு விழித்தெழு !!!
உன் வாழ்வு செழிக்க
விழித்தெழு ...

எழுதியவர் : ஹபீலா ஜலீல் (23-Mar-13, 2:58 am)
பார்வை : 81

மேலே