பெற்றோர்க்கு அழகு

கருவுற்ற போதோ
அல்லது பிறக்கும்
போதோ யாரும்
போராளியாக பிறப்பது
இல்லை அவர்கள்
அடிமைத்தனத்தில் கருவுருகின்றனர்
அநீதிகளில் பிறந்து
விடுகின்றனர் அதலால்
யாரையும் அடிமை
படுத்தாதீர்கள் யாருக்கும்
அநீதிகளை செய்யாதீர்கள்!

நாம் பெற்ற
மக்களாய் இருப்பினும்
நம் எண்ணங்களை
அவர்களுக்குள் திணிக்கும்
போதும் அவர்களை
உடல் ரீதியாகவோ
உள்ள ரீதியாகவோ
துன்புறுத்தும் போதும்
நமக்கு எதிராய்
அவர்கள் கிளர்ந்து
எழுவர் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள்!

நம் பிள்ளைகளிடம்
பிள்ளையாய் நட்பாய்
நெருங்கி பழகுங்கள்
அவர்களுக்குள் ஒளிந்திருக்கும்
தனித்தன்மையை
தெரிந்து கொள்ளுங்கள்
அதை ஊக்கப்படுத்துங்கள்
அதில் அவர்கள்
உயர ஆகுமான
உதவி புரியுங்கள்
நிச்சயமாய் அவன்
அதில் மிகப்பெரிய
சாதனையை படைப்பான்
பெற்ற உங்களுக்கும்
பெருமை சேர்ப்பன்!

ஒவ்வொரு பிள்ளைகளுக்கும்
அவர்களின் பெற்றோரே
முன்முதல் ஆசிரியர்,
ஆசிரியர் சரியாக
இருந்தால் மாணவன்
ஒருபோதும் வழிதவறமாட்டன்!

மரியாதைக்கும் பயத்திற்கும்
உள்ள வேறுபாட்டை
உணருவோம் எதை
நம் பிள்ளைகளிடம்
நாம் இன்று
விதைக்கிறோமோ அதைத்தான்
நாம் நாளை
அறுவடை செய்யமுடியும்!

நல்ல பண்புகளை
அன்பாய் விதைப்போம்
இன்பமுற்று கருவுட்று
ஈன்றெடுத்த ஒவ்வொரு
பிள்ளையையும் சான்றோர்களாக
வான்புகழ வளர்ப்போம்!

தனிமனித ஒழுக்கம்
அனைவரிடத்திலும் இருக்கும்
பட்சத்தில் அநாதை
இல்லங்கள்,முதியோர்
இல்லங்கள் போன்ற
அவலங்கள் சமூகத்தில்
இருந்து நிச்சயமாய்
நீங்கி போகும்!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (23-Mar-13, 2:55 am)
பார்வை : 118

மேலே