வாய்ப்பு.
மற்றொரு முறை முயலுக்கும் ஆமைக்கும் ஒட்டப் பந்தயம் நடந்தது. இந்த முறை தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக ஒரு மேட்டிலிருந்து சரிவின் கடைசியை தொட வேண்டும் என்று போட்டி வைத்தது முயல். ஏனெனில் மேட்டிலிருந்து சரிவை நோக்கி இறங்கும் போது ஆமை இன்னும் கவனமாக தனது அடியை எடுத்து வைக்கும். தான் அதற்குள் சென்று விடலாம் என்று முயல் நினைத்தது. போட்டி ஆரம்பித்தது. முயல் கொஞ்சம் மெதுவாக ஒட ஆரம்பித்தது. ஆமை மேட்டின் உச்சியில் சிறுது அடி எடுத்து வைத்து விட்டு, பின் தனது உடலை மல்லாக்க படுக்க வைத்துக் கொண்டது. இதனால் தனது ஒட்டைக் கொண்டு வெகு வேகமாக சரிவில் வழுக்க ஆரம்பித்து சரிவின் அடியை முதலில் அடைந்து வெற்றிப் பெற்றது. மேட்டிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த முயல், ஏதோ சிறுகற்பாறை உருண்டு வருவதாக எண்ணி கொஞ்சம் ஒதுங்கிய நேரத்தில் ஆமை முயலைக் கடந்தது.
முயல் மீண்டும் தோற்றது.
நீதி : கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றிக் கிட்டும்.