காதல் யுத்தம்

காதல் தேசத்து இளவரசியே...
உன் இதயக் கோட்டையை
கைப்பற்ற படையெடுக்கின்றேன்
காதல் போருக்கு தயாராகிவிடு!
'அன்பு', 'நேர்மை' என்ற
ஆயுதங்களைக்கொண்டே
உன்னுடன் யுத்தம்
செய்யப்போகிறேன்
முடிந்தால் திருப்பித் தாக்கு!!
'முத்தம்' என்ற குண்டுகளை
நீ அங்கும் இங்கும் அள்ளிவீச
காதல் போராளியான நான்
இன்பத்தில் மரணிக்கிறேன்
இளவரசியே...
சமராட வேண்டாம் உடன்
சரணடைந்துவிடு கண்ணே!
இனியும் போர் நீடித்தால்
காதல் சட்டத்தை நான்
மீறிவிடுவேன்!!!
- இரா.சனத்
(கம்பளை)