நீயே என் உயிர் வழி
உன் விழி பார்வை
என் உயிர் வழி இறங்கி
உதிரத்தில் கலந்ததடி நம் காதல்
சிவப்பணுக்கள் வெள்ளணுக்கள்
உன்னுள் சினேகித்து
என்னுள் சீராய் பரவுதடி
இதய தந்துகிகளில் இரண்டற கலந்து
ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிளில்
ஆனந்தமாய்ஆடுதடி
அங்கும் இங்கும் என ஆசையாய் அலையுதடி
காதல் என்றால் கவலை என்ற
காரிருள் மறையுதடி
தொலைவில் நீ இருந்தாலும்
தூரப்பார்வை கூட
கிட்டப்பார்வையாய் விரியுதடி
என் மனம் தன்னில் உன் உருவம் இயைந்து
அறிவு மெம்பரென்கலாய்
என்னை ஆட்டி படைக்குதடி
இனி நான் உன் வழி
நீயே என் உயிர் வழி !
பசுமை நிலவன்