மனிதனாய் பிறந்துவிட்டேன்

மதங்கள் என்னும் சந்தையிலே
இறைவன் அவனை வாங்கிட நினைக்கிறேன்
முடியவில்லை...

சுற்றும் இடமெல்லாம்
சூத்திரம் நிறைந்த மனிதர்கள்,
சுவைக்க துடிக்கும் சுலோகங்கள்...

எட்டுத்திக்கிலும் சுத்தித்திரிகிறேன்
எட்டாத உயரத்தில் ஏற நினைக்கிறேன்

விலங்குகளாய் பிறந்திருந்தால்
என்றோ விளங்கியிருப்பேன்!

என்செய்வேன் மனிதனாய்
பிறந்துவிட்டேன்...

மதங்கள் என்ற மமதையிலே
மக்காத குப்பைகளை ஏற்றி செல்ல
மனம் வரவில்லை...

மதம் பிடிக்காத மனிதனாய்
மதங்கலில்லா இறைவனைத்தேடி,
மௌனம் காக்கிறேன்... மாயவனே!
உன் மாயக்கதைகளை மையம் கொண்டு.

மதங்கள் அனைத்திற்கும் இங்கே மரணங்கள்
வேண்டும்
அதை கொடுக்கும் நீதிபதி நீயாகவேண்டும்.

எழுதியவர் : ராஜநாராயணன் (24-Mar-13, 2:32 am)
பார்வை : 402

மேலே