உனக்கே தருகிறேன் நான்....!!!
அடுத்த ஜென்மத்திலும்
நீயே மனைவி என்றாய்
இந்த ஜென்மத்திலேயே
எப்படி இன்னொருவளுடன்
வாழ்கிறாய் .....?
நான் இறக்கும் தருவாயில்
நீ என்னை இன்னமும்
காதலிக்கிறேன் என ஒரு
பொய் சொல்லி
என்னை பிழைக்க வைக்கலாமெனில்
உண்மையையே சொல்லிவிட்டு போ
இல்லையென
ஏனெனில் ,
என்னை கொல்லும் உரிமையையும்
உனக்கே தருகிறேன் நான்....
உன் ஆயுள் முடியும் வரை
ஆசை தீர வாழ்ந்துவிட்டு வா
அவளுடன்
காத்திருப்பேன் நான்
உன்னையும் என்னையும்
எவளும் பிரிக்க முடியாத
என் கல்லறையில்.......!!!!