இன்னும் எத்தனை...
நித்திரை அழைக்கும்
முன்
உன் நினைவுகளோடு!
கனவு காணும்
காதல் ஈடுபாடு
ஒவ்வொன்றாய்
கூட்டியே
இன்று ஆண்டுகள்
ஐந்து.
வடுவாகிப் போன
என்
வாழ்வின் கோலம்.
நினைவாகிப் போனதுன்
நேசத்தின் சேதம்,
நித்தம் கேட்குதடி
முத்தத்தின் மோகம்,
தத்தித் தவிப்பது
என்
தனிமையின் தாகம்.
எட்டும் தூரத்தில்
இல்லா
ஏக்கத்தின் உறவு.
ஒட்டுண்ணியாய் இன்னும்
உன்
உறவின் வடு.
வரங் கேட்டுப்
பெறா
உன்
நினைவும்
வற்றிப் போகா
என்
எதிர்பார்ப்புகளும்...