என் உயிர் குடிப்பு
விடைபெற எழும்பி
வாசல் நோக்கி
நான் நகர
எம்பிக் குதித்து,
கதவடைத்து
எட்டி என் தோள் தொங்கி,
என் இதழோடு
உன் இதழ் இழைத்து
நீ!
என் உயிர்
பருகிய
நம் முதல் நாள்
உன்னறைச் சந்திப்பு
இன்றுனக்கு மறந்து
போனது.
இன்றும் நான்
என் வாசல் கடக்கும்
நிதமும்
உன் இதழ்
தேடுகிறேன்
நீயோ!
தொலைவாய்
இருந்தும்
துன்பிக்கிறாய் இன்றும்.