நட்சத்திர கவிதைகள்-4
கலாமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தான படைப்பாளிகளின் எண்ணங்கள் ஒளிந்தே கிடந்தாலும் கலாமன்றத்தின் செயற்பாடுகள் ஒளிர்ந்தே தொடரும்.
நல்ல படைப்புக்களின் முகவரிகளை மாத்திரம் உங்கள் முன் சமர்பிக்கும் நட்சத்திரக் கவிதைகளின் நாலாம் பாகம் இது-
=============
நகரத்தின் வீடுகள் -தமிழ்நிலா
மிக மிக அருமையான பாடுபொருள். மிக அற்புதமாக தொடக்கி முடித்திருக்கிறார் படைப்பை. கிராமியத்தின் அவலம் அருமையாக சித்தரிக்கப் படுகின்றது வரிகளில்.
Added by :thamilnila - கவிதை எண்- 113844
-----------------------
மனிதனாய் பிறந்துவிட்டேன் - ராஜநாராயணன்
இன்றைய வன்முறைகளின் மூலக்கூறினை எடுத்துப் பாடி இருக்கின்றார் ராஜநாராயணன். அருமையான கரு...நல்ல படைப்பு.
Added by :Raj Narayanan - கவிதை எண்-113842.
---------------------------
ஆடைகளற்றவன் - கவிஜி
உன்னிப்பான சிந்தனை...வாழ்வியல் சுருக்கம். தனித்துவமான படைப்பு! கவிஜியின் கவிதை திறன் வெளிப்பட்டு நிற்கிறது வரிகளிலும் கருவிலும்.
Added by: கவிஜி - கவிதை எண் -113062
------------------------------------
மரணமெனும் விடியல் - ரோஷானா ஜிப்ரி
இந்த கவிதையின் கரு கரிப்பானது. கவிதையின் முடிவு கசப்பானது...கவிதை அழகானது ! ரோஷனாவின் உயிரோட்டமுள்ள அருமையான படைப்பு !
Added by: ரோஷானா ஜிப்ரி - கவிதை எண் -113606
-----------------
திரும்பிப் பார் - வெள்ளூர் ராஜா
அக்கறை கொண்டு எழுதும் ஒவ்வொருவனும் கேட்டுக்கொண்டால் நன்று இப்படி. வெள்ளூர் ராஜாவின் ஆதங்கம் அருமை ! நல்ல படைப்பு !
Added by: vellurraja - கவிதை எண்-113746
----------------------------------------
ஆராதிப்போம் அமைதியை - பழனி குமார்
அமைதியை அமைதியாக சொல்லி இருக்கும் தோழர் பழனி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.ஆரவாரமின்றி எழுதிய இக்கவிதை/கரு – நன்று !
Added by: nrpkumar - கவிதை எண் -113696

