காதல் + கற்பனை(4)
அலைபேசி சிணுங்கியது, அழைத்தான் அவன்,
நீண்ட நாட்களுக்குப்பின் அவன் குரலைக்
கேட்டதில் துள்ளியது அவள் உள்ளம்......
சந்திக்கணும் என்றான், சம்மதம் என்றாள்..,
ஆனந்தத்தில் கூப்பாடு போட்டது மனம்...
இன்றாவது சொல்லிவிடுவானா அவன் காதலை,,,
'இல்லை, நான் சொல்லிவிடவா என் விருப்பத்தை'
அவள் தனக்குள் பட்டிமன்றம் நடத்தினாள்..
மனம் விட்டு... வாய் விட்டு... எண்ணங்களை
வெளிப்படுத்த வெட்கம் தடுப்பதால்,
கடித வழி அனைத்தையும் எழுதிடலாம்,
அவன் தயங்கினால், அவள் கொடுத்திடணும்
என்று முடிவெடுத்தாள்........
நிறைமாதக்கர்ப்பிணியின் வயிறு போல்,
நிறைந்துக் கிடக்கும் ஏக்கங்களை, காதலை,
பிரிந்து இருப்பதால் இறைந்து இருக்கும்
தாபங்களை, ஏற்ற இறக்கத்துடன் எழுதினாள்...
திடீரென்று மனதில் ஒரு குறுகுறுப்பு....
கடைசியாக ஒரு வரியை கொஞ்சம் தாபமாக
எழுதி, படிக்கும் அவன் முகத்தில் ஓடும்
களிப்பான காதல் ரேகைகளை எண்ணலாமே!,
நினைத்ததை செயலில் காட்டினாள்....
"கண்ணா, கைக்கெட்டும் தூரத்தில் நான் இருக்கேன்,
உங்கள் கரங்களுக்குள் சிறையிடுங்களேன்"
எழுதி முடித்தாள், நாணத்துடன் சிரித்தாள்,
கடிதத்தை மடித்து முத்தமிட்டு,
கைப்பையில் வைத்தாள்....
கிளம்பினாள் சந்தோஷமாக அவனைச் சந்திக்க...!!!
(தொடரும் பாகம்5)

