"காதல் + கற்பனை" (5)
அவனை சந்திப்பதற்காக பல நூறு ஏக்கங்களுடன்,
காத்திருந்தாள் அவள்... அவனைக் காணவில்லை..
சூரியன் அஸ்தமிக்கும் அற்புதமான காட்சியோ,
கண்ணெதிரே பரந்து விரிந்து கிடக்கும் கடலின் அழகோ,
அவள் மனதைக் கொள்ளைக் கொள்ளவில்லை...
அவன் இன்னும் வரவில்லையே என்று பதைப்பதைத்தாள்.
திடீரென்று சில்லேன்று தென்றல் அவளை வருடியது,
மேனி சிலிர்ப்புட்டு நிமிர்ந்து நோக்கினாள்..
அவன் அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்..
அவனைத் தழுவிய தென்றலே இப்படி சிலிர்க்கவைத்தால்,
அவன் கரங்களின் அணப்பு எப்படி இருக்கும்...?
அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்..
அவன் மௌனமாக அருகில் அமர்ந்தான்.
முகத்தில் சோகம், விவரிக்க முடியாத துயரம் தெரிந்தது.
எப்பொழுதும் வந்தவுடனே அவள் கரம் பற்றும் அவன்
இன்று தன் விரல்களையே கோர்த்துப் பிரித்து
ஒரு தடுமாற்றத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்தாள்.
சில நிமிடங்கள் சிந்தினையிலேயே கழிந்தன...
சூழ்நிலையைக் கலகலப்பாக்க எண்ணி அவள்
தன் காதல் கடிதத்தை அவனிடம் கொடுக்க
கைப்பையை எடுக்க எத்தனித்தாள்....
அவன் எழுந்தான். தன் பையிலிருந்து கவரை எடுத்தான்.
அவளிடம் கொடுத்தான். அவள் கரங்களை அழுத்திவிட்டு,
அங்கிருந்து வேகமாக நடந்து சென்றுவிட்டான்.
அவள் விக்கித்துப் போனாள். என்னாயிற்று?
கவரைப் பிரித்தாள். காதல் கடிதம் இல்லை...
கல்யாண அழைப்பிதழ் கலைநயத்துடன் இருந்தது.
அவனோடு காலம் முழுவதும் இணைந்திருக்கணும்
என்ற நினைவில் இருந்த அவள் கனவு சிதைந்தது..
அவள் நேசித்த, உயிராய் நினைத்த அவன்,
தனக்கே உரியவன் என்று கோபுரத்தில் குடிவைத்திருந்த
அவன் இன்னொருத்திக்கு சொந்தமாகப் போகிறான்,
என்று பறைச் சாற்றியது பத்திரிகை........!!!
(தொடரும் பாகம் 6)

