(8) தந்திர காட்டில் நான் (2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்

**************தொடர்ச்சி ***************
(2) விதைக்காத விதையில் விளைந்த மரம் நான்
*************************************************

கூரிய கருத்துக்கள் -அவ்வளவும்
மரம் கூறிய கருத்துக்கள்
மரத்த உள்ளத்தையும் -அன்பெனும்
மருந்திட்டு மாற்றும் கருத்துக்கள்
மதியினில் ஒளியை ஏற்றும் கருத்துக்கள் !

என்று மரத்தை போற்றும் வண்ணம்
கருத்துக்களால் நிரம்பியது என்
எண்ணம் !

அன்பே
போற்றுதலும் தூற்றுதலும்
வேரோடு எங்களை
விரட்டி அடிப்பதும்
பழையதுதான் -நாங்கள்
பழகியதுதான் !

இவ்வாறு மரத்தின்
அசரீரி மீண்டும்
இணைந்தது -என்
எண்ணத்தோடு
பிண்ணி பிணைந்தது !

அன்பே
பூமிக்கும் எங்களுக்கும்
இருப்பது தொப்புள் கொடி
உறவு -நகரமயம்
என்றோர் விஷ(ம)கத்தியால்
அறுப்பது உங்களின்
பிற்போக்கு அறிவு !

எங்களை அறுத்து
ஆனந்தத்தை தேடும்
நீங்கள் உங்கள்
உள்ளங்களை அறுத்து
கேள்வியை புதையுங்கள்
நீங்கள் செய்வது
சரியா என்று ?

*************(தொடரும் )****************
அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வலி ) (25-Mar-13, 2:22 pm)
பார்வை : 102

மேலே