காதல் தோல்வியா தோழா?
தோழா தோழா
எனது ஆறுயிர்
தோழா,காதல்
தோல்வியா?உனை
கவலை கொல்லுதா?
எங்கேயோ எப்போதோ
யாரென்றே அறியாதவளை
முன்பின் தெரியாதவளை
என்னவளேயென இதயமும்
எண்ணிடும்,நமது
அனுமதியன்றியே மனம்
கோட்டையும் கட்டிடும்!
சட்டென அவள்
காதலை மறுக்கையில்
அல்லது மறைக்கையில்
இல்லை வெறுக்கையில்
மன கோட்டையும்
இடுந்திடும்,இதயமும்
நொறுங்கிடும்,கண்களும்
அழுதிடும்,வாழ்வும்
இருண்டிடும்,இததருனங்களில்
நம் சோகத்தை
எப்படி தடுப்பது?
அட போனால்போகட்டும்
எல்லாம் நன்மைக்கேயென
எப்படி நினைப்பது?
உனை மிகவும்
நேசிக்கும் உன்
நட்பை சுவாசிக்கும்
நண்பன் சொல்கிறேன்
கொஞ்சம் கேள்!
நீ அழுகிறாய்
உன் கண்ணீரை
துடைத்தபடி நானும்
அழுகிறேன் கவனித்தாயா?
சோகமே எனக்கு
பிடிக்காது இருந்தும்
உனக்காய் சோகமயம்
ஆகிறேன் உனக்கு
புரியுதா? அவள்
உனக்கு கொடுத்த
வேதனையை நீ
எனக்கும் கொடுப்பது
சரியா? எனக்காய்
கொஞ்சம் சிரித்திடு
இயலாவிடிலும் கொஞ்சமாய்
உன் உதடுகளை
எனக்காக பூத்திடு!
நண்பா ஒட்டுமொத்த
உலகமும் இருட்டினில்
மூழ்கிடும் கவலைகொள்ளாதே
ஒவ்வொரு இருளும்
இனிமையாய் விடிந்திடும்
பொறுமையாய் காத்திரு!
தோழா நீ
சிரிக்கையில் அகிலமே
எனக்கு அழகாய்
தெரியுமே மேகங்களை
கடந்து உலகை
ஒளிருட்டும் சூரியக்கீற்றை
போன்றதல்லவா உன்
சிரிப்பு எனக்கு!
அதலால் என்னை
மகிழ்வூட்ட கொஞ்சம்
சிரித்திடு இயலாவிடிலும்
உன் உதடுகளையாவது
எனக்காய் கொஞ்சம்பூத்திடு!
தோழா யார்
பிரிந்தாலும் ஒருநாள்
இல்லை ஒருநாள்
மீண்டும் சேர்ந்திடுவார்
பூக்கள் உதிர்ந்த
செடிகள் மீண்டும்
பூத்திடுமே அதுபோல்!
ஆகையால் உன்
சோகத்தை புதைத்திடு
எனக்காய் சிரித்திடு!
உன்னை உயிரென
நேசிக்கும் எனக்காய்
உன் உதடுகளை
பூத்திடு........................,