தாயான முதல்வர்
கச்ச தீவை மீட்க்க
கச்சை கட்டி நிற்கும்
அம்மாவுக்கு வணக்கம்
கடலோடி மீன்பிடிக்கும்
மீனவனின் வாழ்க்கை
தினம் தினம் இறப்புதான்
கடும் காற்று பெரும் அலை
தத்தளிக்கும் படகு
கரை திரும்ப கனவுடன்
காத்திருக்கும் மனைவி
இதுதான் அவன் வாழ்க்கை
இப்போது
இலங்கை ராணுவம் வேறு
இடியாய் அவன் வாழ்வில்
என்ன செய்வான்
காவிரிக்கு நீதியை
பெற்றுதந்த முதல்வர்
கண்கலங்கி நிற்கும்
மீனவனுக்கு
கச்ச தீவை
பெற்று தந்தால்
அவர் முதல்வர் மட்டுமல்ல
கடலோடி காரனுக்கு
கருணை கொண்ட தாயும்தான்