♥♥கண்கள்♥♥

கண்கள்....
முகத்தின் அழகான உறுப்பு மட்டுமல்ல
அன்பான உறுப்பும்
அதுவே...
இன்பத்திலும் துன்பத்திலும்
கண்ணீரால் பேசும்
கலைநயம் கொண்டவை
கருவிழிகள்....
பொய் கூறலாமென்று
வாய் முடிவு செய்தாலும்
மெய்யான கண்களுக்கோ
பொய்யுரைத்துப் பழக்கமில்லை
காதலென்ற போதும்
காமமென்ற போதும்
கருணையென்ற போதும்
கோபமென்ற போதும்
நெற்றியின் கீழ் நின்றுகொண்டு
நொடிப்பொழுதில் காட்டிவிடும்
புலவருக்கும் பிடிக்கும்
பூவையர்க்கும் பிடிக்கும்
கவிஞருக்கும் பிடிக்கும்
காதலர்க்கும் பிடிக்கும்
உடல்விட்டு உடல்செல்ல
தானமாய் தந்தாலே புது
உடலோடு உணர்வாக
உறவாடும் கண்களுக்கு
இறப்பில்லை என்றுமே...