கரும்பலகைக் காலம்

ஒத்தயடி
பாதயில
பள்ளிகூடம்
போகயில
ஒத்தயில
போனதில்ல
மெத்தயில
படுத்ததில்ல
கத்தயில
காது கிழியும்
காத தூரம்
ஓடிப்போகும்
கல்லெடுத்து
நானடுச்சா

மத்தியான
சோத்துக்கு தான்
ஐயாரெட்டு
அரிசி கேக்கும்
மடிச்சி வெச்ச
மயிலெறகு....
குட்டி மட்டும்
போடாது
கருமேகம்
கருக்கையில
குட்டி ஆட்டம்
ஆடாது . . .

அரசமர
எல புடுச்சு
ரெண்டா மூணா
அத மடுச்சு
புத்தகத்துல
வெச்சிருப்போம்
பரிச்ச முடிவு
வரவரைக்கும்
கிழிச்சுடாம
பாத்திருப்போம்

கரும்பலக
வெளுக்க நாம
வெகு நாளா
காத்திருப்போம்
வெளுத்தபின்ன
வேகமாக
ஊமத்தங்
காயரைப்போம்

எல்லா நெனச்சாலே
நெஞ்சுக்குள்ள தேனூறும்
கண்ணுக்குள்ள நிரூறும்...

எழுதியவர் : kumar (26-Mar-13, 7:52 pm)
பார்வை : 183

மேலே