எதை கொண்டு வந்தோம்...(அகன் )
மலைப் பயணம்
முடித்து வந்தேன்-
உயரங்களை அள்ளி...!
கடலடி நீந்தி
வெளி வந்தேன்-
ஆழங்களை அள்ளி..!
வான்வெளி எங்கும்
பறந்து மீண்டேன்-
அகலம் கைப்பற்றி..!!
உருக்கும் நெருப்பின்
உள்ளே உலா வந்தேன்-
குளிரின் உயர்வுணர்ந்து..!!
பூங்கா வாசம்
பூர்த்தியாக்கி மீண்டேன்-
வளரும் ரகசியமறிந்து..!!
அன்றியும் ...
வாழ்க்கை வாழ்ந்து பார்க்க ஆசை...
மரணம் எதுவென அறிய...!!!