நானும் என் தோழியரும்.. !!!

காலை பொழுதில் ஒரு புன்னகை..
மாலையிற் பிரியும் பொழுது ஒரு மௌனம் ...
உன் புன்னகையில் நான் மகிழ்ந்தேன்..
உன் மௌனத்தின் வலியை நான் உணர்ந்தேன்...


செல்லமான சண்டைகள்....!!
அன்பின் பரிமாற்றமாய் ...
அங்கே என் மதிய உணவு
காணாமல் போகும் பொழுது !!...

புரியாத பாடங்கள் புரிந்து போயின
தேர்வு பயங்கள் விலகி ஓடின..
தேர்வு முடிவுகள் வெளிவரும் நாட்களில்...
என் கரம் பற்றி கொண்டு மன அச்சங்களை போக்கினாய்...!!


கல்லூரி காலங்கள் கறைந்து சென்றன .
இறுதி நாட்களில் சோகமே உருவாய் ஆனோம்...
முகவரி கேட்டு பெற்றோம் ..
முடிந்தது அந்த நாட்கள்...


என்றாவது ஒரு நாள் உன்னை காண மாட்டேனா ?
- என தவிக்கிறது உள்ளம்...
அலை பேசியில் நீ
தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தாலும்...
என்றும் என் மனம்
உன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும் காற்றைப்போல...

- என் இனிய தோழியருக்கு சமர்ப்பணம் .
சுபாஷினி.mpsi

எழுதியவர் : subashini. mpsi (26-Mar-13, 10:06 pm)
பார்வை : 62

மேலே