பாசம் ....!
தாயின் கருவறை சுவாசம் ....!
தந்தையின் வளர்பிறை நேசம் ......!
ஆம் .....!
அன்பென்னும் பாலூட்டி
முத்தக்கடலில் முக்குளிக்கும்
பிஞ்சு உள்ளங்களின்
புது - மொழிப்பெயர்ப்பு தான்
பாசம் ....!
பாசமென்னும்
பளிங்கு கற்களை
பார்வையினால்
செதுக்கிய காலச்சிற்பியின்
அழியா சுவடுகள் தான்
மனிதர்கள்......!
மானுடங்களே.....!
மரித்தது போதும்
மறைந்து போகாதீர்கள்......!
பாசத்தில் பதிந்து போங்கள் ....!
பாச போர்க்களத்தில்
நானா ..., நீயா ......? என்று
தினம் தினம்
வெற்றி தோல்விகளை சந்திக்கும்
சக்கரை நிலாக்களே.......!
என்றும் பொழியுங்கள்
புன்னகையென்னும்
புதுமழைச்சாரலை அன்பாக ..........!
சாரலுடன் .......
மகேஸ்வரி லோகநாதன்