ஆண்களே ஒரு நிமிடம்- தனஞ்சன்
நாம் எத்தனை நூற்றாண்டுகளாய்
நம்மை மறந்து
உணர்ச்சிகளில் சிக்கியே
உருக்குளைந்து போனோம் ?
வீரமென்ற வாசகத்தில் நம்
நிம்மதியை தொலைத்தோம்
சாதியென்ற சகதியில்
சத்தியம் மறந்தோம்
இம்மையென்ற ஆசையில்
இன்பமிழந்தோம்
மருமையென்ற பேராசையில்
வாழ்வையிழந்தோம்
ஒரு நிமிடம் சிந்தியுங்கள்
வீரமென்பது ஒரு கலையன்றி
கொலையென்று ஆவதில்லை
சாதியென்பது
நமக்குள் தோன்றிய
செய்வினையன்றி
மதிப்பென்று ஆவதில்லை
ஆசையென்ற களப்பு வாயிலில்
கடலைப்போலவே மனம் என்றும் நிறைவடைவதில்லை
நம்
உணர்ச்சியில் வாழ்க்கையை
தொலைத்தது போதும்
நிகழ்ச்சிகள் புதிதாய்
நிர்மாணிப்போம்
பழமைஎனும்
துருப்பிடித்த கணிதங்கள்
பத்தின்
மூன்றிலொரு பாகமாய்
தொடர்ந்திட வேண்டாம்
இரண்டிலொரு பாகமாய்
முற்றிடட்டும்
நமக்கென்று பாதைகளை
பூஞ்செடிகள் கொண்டே
அலங்கரிப்போம் அதில்
புதுமைஎன்னும் பூக்களை
மலர்ந்திடச்செய்வோம்
மண்ணின் மீது
ஆசை துறப்போம்
பெண்ணுக்கும் சமமாய்
பாதை சமைப்போம்
சாதி என்னும் சேறுகடப்போம்-நாம்
மனிதம் என்னும்
நேயம் வளர்ப்போம்
புதுமையின் தளிர்கள் நாங்கள்
புதுமை பதிந்த பொக்கிஷங்களாவோம்