அம்மா

கருவறையில் கடவுள் குழந்தையெனபத்துமாதங்களாக

எனைத்தாங்கி நீ பட்ட அரும்பாட்டை அறிவேனம்மா !

உனைப்போல் ஒரு தெய்வம் இப்பூமியில் இல்லையம்மா!

அன்புக்கும் நீதானம்மா கருணைக்கும் நீதானம்மா

அறிவுக்கும் நீதானம்மா பொறுமைக்கும் நீதானம்மா !

நீதான் என் உயிரம்மா நீயின்றி இவ்வுலகேதம்மா!

உந்தன்பெருமையை உரைக்க வார்த்தையின்றி தவிக்கிறேனம்மா !

எனக்காக பசி பட்டினி கிடந்தாயம்மா!

நேயுற்றவேளையில் துடிதுடித்தாயம்மா!

யாரல்முடியுமம்மா உன்னால்தானேயம்மா !

உனக்காக வாழ்ந்ததில்லை எனக்காகவே வாழ்கின்றாயம்
மா !

உன்னை நானடைய என்னதவம் செய்தேனம்மா !

உந்தனுக்கு யான்பட்ட கடன்தீர்க்க இப்பிறவி போதாதம்மா -இன்னும்

ஏழேழு பிறவி வேண்டுமம்மா !

எழுதியவர் : ஈழத்துக் காவியா (27-Mar-13, 3:40 pm)
பார்வை : 94

மேலே