ஒரு புன்னகை போதுமே

தேகத்தை வருடும்
தென்றல் காற்று!

இதழ்களை விரிக்கும்
அழகிய பூக்கள்!

மனதை சுண்டி
இழுக்கும் மெல்லிசை!

காதலில் விழிகள்
மௌனமாய் மொழியும்
கவிதை மழைகள்!

சாமத்தில் வான்நிலவு
முகில்களை தாண்டி
ஒழுகவிடும் மென்னொளி!

பாறைகள் சில்லென
சுரக்கும் ஊற்றுநீர்!

சோலையில் பறவைகள்
பாடும் கானங்கள்!

இவை அனைத்தும்
புத்தம் புதிதாய்
பூமி பார்த்த
என் மழலையின்
உதட்டு புன்னைகை
முன் மண்டியிட்டு போகின்றன!!!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (28-Mar-13, 2:22 pm)
பார்வை : 97

மேலே