சின்னதாய் சில விஷயங்கள்.
பெயரில்லை...
இடமில்லை...
"அகதி" என்றால் யாருக்கும் புரியக்கூடும்.
எங்கள் வீட்டிலும்...
அம்மா கூட.....
அப்பாவிற்கு...."யேய்" தான்.
*****************************************************************
புன்னகை...
இதழளவு நீளம்தான்...
சில நேரங்களில்...
என் உலகைப் பெரியதாக்கிவிடுகிறது...
"அம்மாவை எவ்வளவு பிடிக்கும்? "...
என்னும் கேள்விக்கு பதிலளிக்கும்
குழந்தையின் கைகளைப் போல.
*******************************************************************
மௌனம்...
சப்தங்களைத் தொலைத்துவிடுவதில்லை...
செரித்துக் கொண்டிருக்கிறது....
ஆறாத வலிகளுடன் சேர்த்து.
********************************************************************