நல்லதிற்காகவா தீமையை படைத்தாய்?

நல்லது கெட்டது
அனைத்தையும் அறிந்தவன் நீ!

நல்லதை மட்டும் கொண்டு
நீ உலகை நிறைத்திருந்தால்
அது நல்லது என்று
இந்த மனிதனின் புத்திக்கு
உரைத்திருக்காது!

எல்லாம் படைத்தவன் நீ!
நீ படைத்ததென்னவோ
நல்லதைத்தான்!

இன்றோ
நிறைய தீதும்
குறைய நன்றுமாய்
நலிந்துவிட்டது உலகம்!

மனிதனின்
சிந்தனையைத் தூண்டி
அணுவை படிக்க வைத்தாய்!
அவனோ
அணுகுண்டை படைத்துவிட்டான்!

அவனுக்கு
கொஞ்சமாய்
புத்தி தந்தாய்!
அவனோ
உன்னைப் பற்றியே
சந்தேகப்படுகிறான்!

நீ தீயதை நல்லதிற்காய் படைத்தாயா!
நல்லதை வெல்வதற்காய் படைத்தாயா!
இல்லை
நல்லதை கொல்வதற்காய் படைத்தாயா!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Mar-13, 10:52 pm)
பார்வை : 113

மேலே