இதயத்தின் கதறல்

உன்னிடம் நான் தொலைத்தது
என் இதயத்தை மட்டுமே
ஆனால் நீயோ என்னை மொத்தமாய்
தொலைத்து விட்டாய்

உயிரோடு ஒரு சமாதி!!!!
உன்னால் புதைக்க பட்ட சமாதிக்கு
மலர் வளையம்!!!
யாரை ஏமாற்ற இந்த நாடகம்???
ஓர் இதயத்தின் கதறல் போதும்
வேண்டாம் இன்னும் ஒரு நாடகம்

உன்னை நேசிக்க ஆயிரம்
காரணங்கள் சொன்னாய்
இன்று காரணங்களே இல்லாமல்
என்னை கொல்லாமல் கொன்று விட்டாய்

என் அர்த்தமற்ற வாழ்க்கை
உன்னால் அர்த்தமாகி போனதாய் எண்ணினேன்
புரிந்து கொண்டேன்
உன்னால் நானே அர்த்தமற்று போனேன் என்று

அர்த்தமற்ற நான்!!!!
சாகடிக்க பட்ட பிணமாய்!!!
உன்னை நேசிக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல் தவிக்கிறேன்...

எழுதியவர் : (29-Mar-13, 12:32 pm)
பார்வை : 306

மேலே