இதுவும் ஒரு மழைக்காலம்

இறக்கைகள் முளைத்த யானைகளை வென்றிட
கண் மூடித் துரத்துகிறார்கள் போர்வீரர்கள்
தத்தம் தலைகளை கைகளில் ஏந்திக்கொண்டு.
கண்ணிமைக்கும் நேரத்தில்
கட்டவிழ்ந்த பெரும் புணல் பூமியைக் குளிர்விக்க
அனைத்து மேகங்களும் புறாக்களாக உருமாறி
அடிவானம் விரைகிறது
போரினை உடனே நிறுத்தச் சொல்லி.

எழுதியவர் : பிரேம பிரபா (29-Mar-13, 10:00 pm)
பார்வை : 146

மேலே