தாமரைத் தடாகம் - II
பெண் படைப்பாளிகளின் தனித்துவமான படைப்புக்களை தொகுத்து தரும் "தாமரை மொட்டுக்கள்" தோழர் சங்கரன் அய்யாவின் ஆலோசனையின் படி "தாமரைத் தடாகம்" என்று பெயர் மாற்றி பதியப் படுகின்றது.
கீழுள்ள படைப்புக்கள்/படைப்பாளிகள் , வாசகர் உங்களின் கருத்துக்கள், தேர்வுகள் மூலம் ஊக்குவிக்கப் பட வேண்டும் என்பது கலாமன்றத்தின் பணிவான வேண்டுகோள் !
=======================================
இப்படிக்கு குற்றுயிர்கள் - பாத்திமா ஹானா
ஈழத்து குழந்தையொன்றின் உருக்கமாக படைப்பு. யுத்தத்தின் வலியை மிக மிக அருமையாக வெளிப்படுத்துகின்றது வரிகள் ! ஜனம் வேண்டுமா ? ஜனநாயகம் வேண்டுமா ? உங்கள் கருத்துக்கள் பதில் பேசட்டும் அங்கே !
கவிதை – அற்புதம் !
Added by: Fathima Zaama கவிதை எண்-89769 -
மொத்த தேர்வு-16
========================
விளை(லை) நிலம் - ரம்யதர்ஷினி
நல்லதொரு சமுதாய அக்கறைக் கொண்ட பதிப்பு இது. ரம்யதர்ஷினி எடுத்துக் கொண்ட பாடுபொருளுக்காக பாராட்ட வேண்டும். நிலம் கேட்கும் கேள்விகளும் அதிலிருக்கும் நியாயங்களும் சிந்திக்க வேண்டியவை.
கவிதை – அருமை !
Added by: ramyadharshini - கவிதை எண்- 104407 -
மொத்த தேர்வு-8
==========================
தெய்வம் தந்த வீடு - பிரியா.கே
அழகாக பட்டியலிட்டு சொல்கிறார் எங்கள் பூமியில் என்னவெல்லாம் இருக்கிறது என்று ! நிதர்சனம் பேசும் வரிகள் ! பூமா தேவியின் புகழ் பாடும் கீதம் மிக அழகு!
கவிதை – அழகு !
Added by: priya k - கவிதை எண் – 109901 -
மொத்த தேர்வு-9
=================
ஊசி – யாத்விகா கோமு
கவிதை என்று வந்துவிட்டால் ஒரு குறிப்பிட்ட வட்டத்துள் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும் தளத்தில் மிக மிக குறைவான படைப்பாளிகளே வித்தியாசமான, நினைத்துப் பார்க்க முடியாத விடயங்களுக்கெல்லாம் இலக்கிய வடிவம் கொடுக்கிறார்கள் ! குழந்தை யாத்விக்காவும் அப்பணியை அட்டகாசமாய் செய்திருக்கிறார். தனித்துவமான படைப்பு!
கவிதை-வித்தியாசம்
Added by :yathvika komu - கவிதை எண் – 93573 -
மொத்த தேர்வு :20
======================
உழைப்பின் வேர்வையில் - ஜெய ராஜரெத்தினம்
உழைக்கும் மக்களைப் பற்றி சொல்லி இருக்கும் நல்ல படைப்பு...நல்ல கருப் பொருள். இன்னும் கொஞ்சம் உரமிட வேண்டிய நிலையில் படைப்பு இருந்தாலும் அருமையாக எழுதி இருக்கிறார் !
கவிதை – நன்று
Added by :jayarajarethinam - கவிதை எண் – 114221 மொத்த தேர்வு - 6
-----------------------------------------------வளர்த்து வாழ்வோம் !